ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் சுனில் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் சுனில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
» பெண் வேடத்தில் மிரட்டும் யோகிபாபு - ‘மிஸ் மேகி’ டைட்டில் டீசர் எப்படி?
» உலக அளவில் ரூ.150 கோடி வசூலுடன் முன்னேறும் ‘வாரிசு’, ‘துணிவு’
மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகர்களை உள்ளடக்கி பான் இந்தியா படமாக ஜெயிலர் உருவாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 3 சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் படம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago