அஜித்தின் ‘ஏகே 62’ முதல் ‘சந்திரமுகி 2’ வரை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்.
ஏகே 62: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிதுள்ள ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே 62’ படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதை அந்நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைவன்: 'வாமனன், 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'இறைவன்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.
சந்திரமுகி 2: கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.வாசு இயக்குகிறார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யன்: ‘கட்டா குஸ்தி’ படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘ஆர்யன்’. பிரவீன்.கே இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் வெளியிடும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
எஸ்எஸ்எம்பி 28: மகேஷ்பாபு, சம்யுக்தா மேனன், பூஜா ஹெக்டே, நடிக்கும் புதிய படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ‘SSMB28’ என அழைக்கப்படும் இப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. அதேபோல அனுஷ்கா ஷெட்டியின் பெயரிடப்படாத புதிய படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago