‘‘என் அப்பா ‘வாரிசு’ படத்தைப் பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை” என்று படத்தின் இயக்குநர் வம்சி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வம்சியின் தந்தை ‘வாரிசு’ படத்தைப்பார்த்து கண்கலங்கியபடியே அவரை கட்டியணைக்கிறார். இந்த உணர்ச்சிமிகு தருணத்தை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் வம்சி, “இன்று எனது அப்பா ‘வாரிசு’ படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ.. லவ் யூ அப்பா” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
» தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு நிறைவு
» “கடவுளைச் சந்தித்தேன்”- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்த ராஜமவுலி பூரிப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago