உடைந்து அழுத தமன்... தேற்றிய வம்சி... - ‘வாரிசு’ ஷோ நெகிழ்ச்சி சம்பவம்

By செய்திப்பிரிவு

விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வாரிசு’ படத்தைப் பார்த்த பின்பு படத்தின் இசையமைப்பாளர் தமன் உடைந்து அழும் காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் இன்று அதிகாலை 4 மணி அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் இயக்குநர் வம்சி இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் ‘வாரிசு’ படத்தை கண்டு ரசித்தனர்.

படம் முழுவதும் ரசிகர்களின் கைத்தட்டல், விசில் என உள்ளிட்டவற்றால் படக்குழுவினர் நெகிழ்ந்த நிலையில், இதன் உச்சகட்டமாக படத்தின் இசையமைப்பாளர் தமன் படம் முடிந்ததும் உடைந்து அழுதக் காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனந்த கண்ணீரால் கண்கலங்கும் தமனை தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் ஷ்யாம் ஆகியோர் கட்டியணைத்தனர்.

படத்தின் இயக்குநர் வம்சி தேற்றும் அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக, படத்தில் இசையமைப்பாளர் தமன் இசை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்