வாரிசு ரிலீஸுக்காக வெயிட்டிங்கில் இருந்தேன்; விரைவில் தளபதி 67 அப்டேட்: லோகேஷ் கனகராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தளபதி 67’ பட அறிவிப்பு குறித்த தகவல் வெகு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள வாரிசு படத்தை பார்த்த பிறகு அவர் இதனை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது வெளியாகி உள்ள வாரிசு படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அதற்கு காரணம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளிவந்த மாஸ்டர் பட வெற்றிதான். அதே போல கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படமும் வெற்றி பெற்றது. அதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் செல்லும் இடம் எல்லாம் இது குறித்து கேட்கப்பட்டது. இதுவரை அதற்கு மவுனம் காத்து வந்த அவர் வாரிசு வெளியான நிலையில் விரைவில் அப்டேட் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வாரிசு படத்தை அவர் திரையரங்கில் பார்த்தார். “படம் பார்க்க மிகவும் ரெஃப்ரெஷிங்காக இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காகதான் வெயிட்டிங்கில் இருந்தேன். விரைவில் தளபதி 67 படத்திற்கான தேதி குறித்த அறிவிப்பை நான் சொல்வேன்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்