இதுதான் நான் 54: ‘ஏழையை தூக்கியெறியாதே..!’

By பிரபுதேவா

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில அடுத்தடுத்து படங்கள்ல நடிச்சிக்கிருந்த நேரம். ஒரு படத்தோட பாட்டு ஷூட்டிங் வேலையில வெளியூர்ல இருந்தேன். அது எந்த ஊர்னு சொன்னாக் கூட அந்தப் படம் எதுன்னு தெரிஞ்சிடும். அதனால இங்கே அது வேண்டாம்னு தோணுது. திட்டமிட்டதைவிட ரொம்ப கம்பியான நாட்கள்ல ஷூட் பண்ணிட்டிருந்தோம்.

படத்தோட தயாரிப்பாளர் எங்கக் கூடவே இருந்தார். நாங்க காலங்காத்தால ஷூட் பண்றது, சாப்பிடாம ஷூட் பண்றது, வெயில்ல கஷ்டப்படுறதுன்னு எல்லாத்தையும் தூரத்துல இருந்து பார்த்துட்டுத்தான் இருந்தார். ஒரு நாள் மத்தியானம் 3 மணியிருக்கும். என்னை நோக்கி வந்தார். நாங்க இப்படி ஷூட் பண்ணிட்டிருக்குறதை பார்த்து, பரிதாபப் படுற மாதிரி இருந்தது. கிட்டே வந்து, ‘சாப்பிடலீங்களா? இவ்வளவு வெயிலா இருக்கே, ஏன் இதுல கஷ்டப்படணும்? பத்து நாட்கள்ல முடிய வேண்டியது, ஏழு நாட்கள்லயே முடிஞ்சிடும் போலிருக்கே. இன்னைக்கு ஆறாவது நாள்தானே. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்களேன்!’’ன்னு சொல்வார்னு பார்த்தோம்.

என்கிட்ட வந்தவர், எதைப் பத்தியும் கவலைப்படாம, ‘முடிஞ்சிடுச்சா? முடிச்சிடுவீங்களா?’’ அப்படின்னு கேட்டார். நான் அந்த ஷாட்டை எடுத்துட்டு, ‘‘முடிஞ்சிடுச்சு. முடிச்சுட்டோம்!’’னு சொன்னேன். ஆனா, இன்னும் பாட்டு பேலன்ஸ் இருந்துச்சு.

அந்தப் படமும் நல்லா போச்சு. பாடல்களும் சூப்பர் ஹிட் ஆச்சு. போனிகபூர் சாரோட சேர்ந்து ஒரு பாட்டு எடுத்தப்போ இருந்த அனுபவத்துக்கு நேர் எதிர்மறையான அனுபவம் இது!

நடிகர்களை விட, நிறைய டான்சர்ஸ் என்னோட பாட்டுல வொர்க் பண்ண யோசிப்பாங்க. அதுக்கு காரணம், ‘பெண்ட் எடுத்துடுவேன்!’ன்னு அவங்களே சிரிச்சுட்டே சொல்வாங்க. அவங்கள்ல சிலரை இப்போ பார்க்கும்போது ‘‘அன்னைக்கு வந்திருந்தா இன்னைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும். நிறைய கத்துக்கிட்டிருப்போம்!’’னும் சொல்வாங்க. இந்த மாதிரி நிறையப் பேர் பயப்படுறதாலயும், பெண்ட் எடுக்குற தாலயும், நான் டைரக்‌ஷன்னு இருக்கும்போது பெருசா பாட்டுக்கு கொரியோகிராஃப் பண்றது இல்லை.

நடிகர், நடிகைகள் பொதுவா ஒரு நாளைக்கு ஒண்ணுல இருந்து ஒன்றரை மணி நேரம் ஜிம்முக்கு போவாங்க. பாட்டோட ஷூட்டிங் நேரத்துல மட்டும் அதுக்கு பதிலா அந்த பாட்டோட டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பண்ணலாம். அப்படி பண்ணும்போது அது டான்ஸ்ல டிரெய்னிங் ஆன மாதிரியும் இருக்கும். ஷூட்டிங் சீக்கிரம் முடிஞ்ச மாதிரியும் இருக்கும். ஜிம்முக்கு போன மாதிரியும் இருக்கும்.

தமிழ்ல ‘மிஸ்டர் ரோமியோ’ன்னு ஒரு படம். வட இந்தியா வுல நடிச்சிட்டிருந்த ஷில்பா ஷெட்டி அந்தப் படத்துக்காக இங்கே வர்றாங்க. அதுல, ‘முத்து முத்து மழை முத்தாடுதே..’ன்னு ஒரு பாட்டு. முதல் நாள் பாட்டோட ஷூட்டிங். மூவ்மென்ட்டை காமிச்சோம். அவங்களோட முகம் மாறிடுச்சு. அவங்க அம்மா கிட்ட போய்ட்டு ‘‘நம்ம கிளம்பலாம்மா’’ன்னு சொன்னாங்க. ‘‘என்னாச்சு!’’ன்னு கேட்டேன். ‘‘இது ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ன்னு சொல்லிட்டு, லைட்டா கண் கலங்கவும் செய் தாங்க.

அதுக்கு நான், ‘‘என்கூட ஆடணும்னுதானே வந்தீங்க. ஈஸீயா இருந்து சுமாரா இருந்தா பாம்பேல இருந்து வந்திருப் பீங்களா? இல்லல்ல. பரவாயில்லை, நாம எவ்ளோ ரிகர்சல் எடுத்துக்கலாமோ… அதை எடுத்துட்டு உங்களுக்கு எப்போ சந்தோஷமோ அப்போ எடுப்போம்!’’னு சொன்னேன். ரிகர்சல் ஆரம்பிச்சாங்க. பாட்டும் நல்ல படியா முடிஞ்சுது. இப்போ கூட ஷில்பா ஷெட்டியோட ஒன் ஆஃப் தி பேவரிட் பாட்டு இது தான். ரீசன்ட்டா அவங்களை ஒரு டான்ஸ் ஷோவ்ல பார்த் தேன். அந்த ‘மிஸ்டர் ரோமியோ’ பாட்டை சொல்லி, ‘எவ்வளவு ஜாலியா இருந்தது. அதை மிஸ் பண்றேன்!’னு சொன்னாங்க.

அந்தப் படத்துல ‘ரோமியோ ஆட்டம் போட்டா!’ன்னு ஒரு பாட்டு. நைட் ஷூட். பதிமூணு, பதினாலு ஷாட்ஸ்ல அந்தப் பாட்டை முடிச்சோம். எனக்கு எப்பவுமே கட் ஷாட் இல்லாம நிறைய லென்த் லென்த் ஷாட் இருந்தா ரொம்ப பிடிக்கும். அதுல ‘ஏழையை தூக்கியெறியாதே..!’ன்னு ஒரு வரி வரும். அந்த வரியைக் கேட்டதும் எனக்கு தலைவர் எம்.ஜி.ஆர் ஞாபகம் வந்துடுச்சு. நாமதான் அவரோட ரசிகனாச்சே. அதுக்கு ஏத்த மாதிரி நானும் எம்.ஜி.ஆர் ஸ்டைல்லயே நடனம் அமைத்து ஆடியிருப்பேன். என் ஸ்டைலையும், தலைவர் ஸ்டைலையும் கம்ப்பைன் பண்ணி ஆடினது எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு.

அதே பாட்டுல ஒரு இடத்துல கை மூவ்மெண்ட் ஒண்ணு பண்ணியிருப்பேன். என்னை சுத்தி டான்ஸர்ஸ் எல்லாரும் நிப் பாங்க. நான் மட்டும் கை முழுக்க தண்ணியில நனைச்சுக்கிட்டு கையை மட்டும் சுழற்றி ஆடுற மாதிரி ஒரு மியூசிக் பிட்ல வர்ற ஸ்டெப் அது. அந்த இடத்தை ஆடி முடிச்ச அடுத்தநாள் கை பயங்கர வலி. அப்போ விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் ஒருமுறை அந்த பாட்டை நான் பார்த்தேன். ‘‘என்னடா கை இது. இப்படி சுழலுதே! அதான் வலிச்சுருக்கு!’’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆடும்போது அடி, வலி எதையும் கண்டுக்கிறதில்லை. ஃபைட்டர்ஸ்கூட அப்படித்தான்.

அதுலயே ஒரு பிஜிஎம் இருக்கும். அதுல நான், ஷில்பா ஷெட்டி, டான்ஸர் பாய்ஸ் எல்லாரும் இருப்போம். ஒரு ரவுண்ட் மேலே பறந்து முட்டியில உட்காருவேன். அந்த நேரத்துல இருந்த எனர்ஜி லெவல் வேற மாதிரி. அந்த வேகம் எல்லாம் இன்னைக்கு வருமா? வராதான்னு தெரியலை. அதெல்லாம் இப்போ டிரை பண்ணிப் பார்க்குறதுமில்லை. ஒருவேளை வராம இருந்துட்டா மனசுக்கு கஷ்டமாகிடும். அதனாலயே, எதுக்கு வம்புன்னு டிரை பண்றதில்லை.

அந்தப் பாட்டுல ஆடின டான்சர்ஸ் நிறையப் பேர் இப்போ மாஸ்டரா இருக்காங்க. என்னைப் பார்க்கும்போது, ‘அந்தப் பாட்டு அப்படி, இப்படி!’ன்னு சொல்வாங்க. பண்ணும்போது சாதாரணமாத்தான் இருக்கு. இப்போ பார்த்தா பிரமிப்பா இருக்கு.

இப்போ ரீசன்டா ‘தேவி’ படத்துல ‘சல்மார்’ பாட்டுக்கு ஆடி முடிச்சுட்டு பக்கத்துல இருந்த டான்சர்ஸ், அசிஸ்டெண்ட் டைரக் டர்ஸ்கிட்ட, ‘நான் முன்னே மாதிரி ஆடுறேனா? ஓ.கேவா?’ன்னு கேட்டேன். அவங்களும் சிரிச்சாங்க. இல்லைங்கிறாங்களா? ஆமாம்கிறாங்களான்னு தெரியலை. ‘அட சொல்லுங்கப்பா?’ன் னேன். என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, ‘‘அப்படியே ஆடுறீங்க’’ன்னு சொல்லிட்டு ஓடிட்டாங்க.

‘காதலா காதலா’ படம். கமல் சாரும், நானும் சேர்ந்து நடிச்சோம். அதுல, ‘காசு மேல காசு வந்து’ன்னு வர்ற பாட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் ஆடினோம். அந்தப் பாட்டுக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கு. அது என்ன… வர்ற வாரம் சொல்றேனே.

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்