ஆன்மிக படங்கள் அதிகமாக வர வேண்டும்: இயக்குநர் பேரரசு கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஸ்ரீவெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை ராஜா தேசிங்கு கையாண்டுள்ளார். நாயகனாக விஜயபிரசாத் நடிக்க, நாயகியாக பூஜா நாகர் நடித்திருக்கிறார்.

கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத் உட்பட பலர் நடித்துள்ளனர் மகேஷ்மகா தேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபு அரவிந்த் இசை அமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இசை அமைப்பாளர் தினா, இயக்குநர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “33 வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கும் ஐயப்பன் பக்தி படம் இது. இதுபோன்ற ஆன்மிக படங்கள் அதிகமாக வர வேண்டும். திரையரங்குகளுக்கு மக்கள் சென்று இதுபோன்ற படங்களைப் பார்த்து வெற்றி பெற செய்தால் பக்தி படங்கள் அதிகமாக வரும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்