சென்னை: திரை உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ஒருவருக்குதான். அது ரஜினிகாந்துக்கு மட்டும்தான் என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் மோகன்.
நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வரும் 11-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இது குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த சூழலில் நடிகர் மோகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இன்றைய சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“அப்போதிலிருந்தே இப்போது வரையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு போட்டி உள்ளது. பல ஸ்டார்கள் இருக்கலாம். ஆனால் அந்த பட்டம் யார் இடம் உள்ளது என பார்க்க வேண்டும். அது ரஜினி சார் வசம் மட்டும்தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன் நடிப்பில் ஹரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் குஷ்பு, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago