‘மாமனிதன்’: சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை காயத்ரி 

By செய்திப்பிரிவு

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, நடிகை காயத்ரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ‘ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைவிழாவில் 10-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, சாய் பல்லவி நடித்த ‘கார்கி’, ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘விசித்திரன்’, விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘முகிழ்’ உள்ளிட்டவை அடங்கும்.

ஜன.10-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் அங்கமாக, வாழ்நாள் சாதனையாளர் விருதினை நடிகை அபர்னா சென் பெற்றார். இதர விருதுகளின் வரிசையில் சிறந்த நடிகைக்கான விருது காயத்ரிக்கு வழங்கப்பட்டது. ‘மாமனிதன்’ தமிழ் படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருதினை காயத்ரிக்கு, அபர்னாசென் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்