அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் ‘டிமான்டி காலனி 2’ அறிவிப்பு வீடியோ

By செய்திப்பிரிவு

அருள்நிதி நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி தற்போதுவரை 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவை பொறுத்தவரை படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்