பிப்.3-ல் யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ ரிலீஸ்

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். சிறுமி ஸ்ரீமதியுடன் யோகிபாபு கடலருகே நின்றுகொண்டு கைகாட்டும் முதல் பார்வை ரசிகர்களை ஈர்த்தது.

மேலும் இந்தப் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு, பொறுப்பான தந்தையாகவும் நடித்திருக்கிறார். காமெடியில்லாமல் நகரும் படம் எளிய குடும்பத்திற்குள் வரும் பிரச்சினையை போராடி தீர்க்கும் ஒரு தந்தையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்