குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா? - ‘வாரிசு’ ட்ரெய்லர் ரியாக்‌ஷன்

By செய்திப்பிரிவு

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லர் குறித்த நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தமன் இசையமைத்துள் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீடு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அதில் ரசிகர்களின் ரியாக்‌ஷன்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

குருப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த மாதிரியான ஃபேமிலி சப்ஜெக்ட்டை தமிழ் மக்கள் பார்த்து நீண்டநாள் ஆகிவிட்டது. இந்தக் கதையை தேர்ந்தெடுத்தற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.


ஆதித்யா சக்ரவர்த்தி என்பவர் ட்விட்டர் பக்கத்தில், “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என போஸ்டர் ரெடி பண்ணுங்க” என்று பதிவிட்டுள்ளார்.

ஈஸ்வர் சக்தி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘லெஜண்ட்’ படத்தில் வரும் லெஜண்ட் சரவணனின் ரியாக்சன் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Loading...

ஜான் விஜய் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அலவைகுந்தபுரம்லோ’ படத்தைப்போல ட்ரெய்லர் இருப்பதாக குறிப்பிட்டு, மீம் டெம்ப்ளேட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

கோகுல் பிரசாத் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “யப்பா, இது மகேஷ் பாபுவோட ஶ்ரீமந்துடுக்குப் போட்ட செட்டுப்பா! ஜெகபதி பாபுவுக்குப் பதிலா சரத்குமாரை கூப்ட்டு வந்திருக்காங்க!” என பதிவிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்