“உத்தமவில்லன் நஷ்டத்தை ஈடு செய்ய கமல் கொடுத்த வாக்குறுதி” - நினைவுகூர்ந்த லிங்குசாமி

By செய்திப்பிரிவு

“உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்” என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் ‘பிகினிங்’. ஆசியாவில் முதன்முறையாக பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். ஜனவரி 26-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லிங்குசாமி, “இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் புதிய முயற்சிகள் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இப்படத்தை பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்து விட்டு, இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது, திரையரங்கிற்கான படம் என்றார்கள். அதை 3 திரையரங்குகளில் உணர்ந்தேன். அதேபோல், இப்படம் வெளியானதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன். ‘பிகினிங்’ படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் மற்றும் மாஸ்டர்பீஸ்-ம் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான்.

என் இயக்கத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ‘உத்தம வில்லன்’ படத்தை திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மை தான். முதலில் நாங்கள் முடிவெடுத்தது பாபநாசம் தான். ஆனால், கமல் ஆசைப்பட்டதால் ‘உத்தம வில்லன்’ படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். ‘உத்தமவில்லன்’ படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்