அஜித் - விஜய்க்கு ஒன்றாக பேனர் வைத்து கவனம் ஈர்த்த புதுச்சேரி ரசிகர்கள்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: நடிகர்கள் அஜித், விஜய்க்கு ஒன்றாக பேனரை புதுச்சேரியில் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் நாயகர்கள் இடையே போட்டி இயல்பானது. அக்காலத்தில் தியாகராஜ பாகவதர் - கிட்டப்பா, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற போட்டி தற்போது அஜித் - விஜய் என ரசிகர்கள் இடையே போட்டி உச்சத்தை அடைந்துள்ளது. உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் இரு தரப்புக்கும் இடையே பரபரப்பு பற்றிக்கொள்ளும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் வெளியாகிறது. புதுச்சேரி நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுவதும் அஜித் - விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர். நகரின் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட் - பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தரப்பும் தங்கள் விருப்ப நாயகர்களை உயர்த்தி பிடிக்கும் வாசகங்கள் இடம் பெறும் வகையில் பேனர்கள் வைத்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக காமராஜ் சாலையில், "தல தளபதி" என குறிப்பிட்டு விஜய்க்கும் அஜித்துக்கும் ஒரே பேனரை ரசிகர்கள் வைத்துள்ளனர். இதில் டூவீலரை அஜித் ஓட்டுவது போலவும், பின்னால் விஜய் உட்கார்ந்து வருவது போலவும் வடிவமைத்துள்ளனர்.

இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக "தல தளபதி' என குறிப்பிடப்பட்டுள்ளது. பேனரின் கீழே ''தல-தளபதி வெல்லவும்'' வாழ்த்துகளை குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்