‘ரூட் நம்பர் 17’ படத்துக்காக பூமிக்கு அடியில் குகை செட்

By செய்திப்பிரிவு

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘ரூட் நம்பர் 17’. அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஞ்சு, விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர். ஹரிஷ் பெராடி , அருவி மதன், அமர் ராமச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவுசேப்பசன் இசை அமைக்கும் இந்தப் படம் பற்றி அபிலாஷ் ஜி தேவன் கூறும்போது, “1990 முதல் 2020 வரை 3 கால கட்டங்களில் நடக்கும் பழிவாங்கும் கதை. ஜித்தன் ரமேஷ் 3 கெட்டப்புகளில் நடித்துள்ளார். அடர்ந்த காடு, மிகப்பெரிய குகை, வறண்ட சமதள பகுதி என 3 விதமான இடங்களில் கதை நடைபெறுகிறது. படத்துக்காக 5500 சதுர அடியில் பூமிக்கு அடியில் பெரிய செட் அமைத்து 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அது வித்தியாசமாக இருக்கும். ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என்றார்.

சினிமா துளிகள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்