பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின், தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள படம், 'செம்பி'. டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவை சரளாவின் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது.
இதுபற்றி இயக்குநர் பிரபு சாலமனிடம் கேட்டபோது கூறியதாவது: இது, யதார்த்தமான படம். ரசிகர்களிடையே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சில திரையரங்குகளுக்குச் சென்றோம். ரசிகர்கள், ‘இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து கொடுங்கள்’ என்றார்கள். அவர்களுடன் உரையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. அடுத்து மதுரை, கோவை பகுதி தியேட்டர்களுக்கு செல்ல இருக்கிறோம்.
சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் படத்துக்கு தியேட்டர்களை அதிகரித்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. அது ‘செம்பி’க்கும் நடந்திருக்கிறது. அடுத்து ‘கும்கி 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க இருக்கிறேன். இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago