ஏகண்டி மலையில் சசிகுமார் பட ஷூட்டிங்

By செய்திப்பிரிவு

‘அஞ்சல’ தங்கம் பா.சரவணன் அடுத்து சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் சசிகுமார் ஜோடியாக, ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கருணாஸ், விக்னேஷ், ‘அகண்டா’ நிதின் மேத்தா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் கர்னூல் அருகே உள்ள வறண்ட மலைப்பகுதியான ஏகண்டியில் நடந்துள்ளது. இதுவரை தமிழ் படங்களின் படப்பிடிப்பு அங்கு நடந்தது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விஷுவல்கள் மிரட்டலாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

“யாரென்று அறிமுகமில்லாத 3 பேர் ஒரு பயணத்துக்கு செல்ல நேர்கிறது. அவர்கள் ஏன் செல்கிறார்கள்? அவர்களுக்கான பிரச்சினை என்னஎன்பது கதை. ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தேனியில் ஜனவரி மாதம் நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்