‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பார்த்து மக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள் - வடிவேலு 

By செய்திப்பிரிவு

‘‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மிகவும் நன்றாக வந்துள்ளது. மக்கள் அதைப்பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்” என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செந்தில் வேல் முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. மனதில் கஷ்டம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது, உங்க கஷ்டமெல்லாம் தீரும். உங்க குறையெல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம் என்பது திருச்செந்தூர் செந்தில் முருகனுடைய வேண்டுதலா நான் நெனைக்கிறேன். ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மிகவும் நன்றாக வந்துள்ளது. மக்கள் அதைப்பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குடும்பப்படம். படம் பார்த்தவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள். பெரிய வெற்றிப்படமாகியிருப்பதால் தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக உள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் நல்ல கதை உள்ள படம். இது மக்களுக்கு பிடித்த படமாக அமையும். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கிறாங்க. இது கடவுளுடைய ஆசீர்வாதம்” என்றார்.

நீங்கள் முதலில் பார்க்க விரும்பும் படம் வாரிசா துணிவா? என்ற கேள்விக்கு, ”எல்லா படமும் நல்லா ஓடணும். பெரிய வெற்றி பெறணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும். சினிமா நல்லா இருந்தாத்தான் எல்லாரும் நல்லா இருக்க முடியும். நான் அடுத்ததா மாமன்னன் என்ற படத்துல நடிக்கிறேன். அடுத்து சந்திரமுகி-2 வருது. அடுத்து விஜய்சேதுபதி சார் கூட நடிக்கிறேன். அதேமாதிரி நல்ல கதையுள்ள படங்களில் நடிக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்