விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கின் முகப்பில் இன்று மதியம் 2 மணி அளவிலிருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டிருந்த சூழலிலும், நேரு உள்விளையாட்டு அரங்கின் வாயில்கள் திறக்கும்போது, ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு சென்றதால், ரசிகர்களும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
» சர்க்கஸ்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் ஷெட்டியின் மோசமான ஓப்பனிங்!
» ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பாருங்கள் - பாரக் ஓபாமாவுக்கு பரிந்துரைத்த ரசிகர்கள்
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளார்.
இதில் தயாரிப்பாளர் வம்சி அரங்கில் நுழையும்போது ரசிகர்கள் ‘நம்பர் 1’ ‘நம்பர் 1’ என கூச்சலிட்டனர். மேலும், படக்குழுவினரைத் தவிர்த்து, பாடகர் ஷங்கர் மஹாதேவன், ட்ரம்ஸ் சிவமணி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago