சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் 'கனெக்ட்' திரைப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், "நேற்று திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரைத் துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
» ஷ்ரத்தா கொலை வழக்கு | அஃப்தாபுக்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவு வெளியீடு
» சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு இருக்குமா?
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'கனெக்ட்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 secs ago
சினிமா
19 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago