அதிரடி வசனங்கள், மிரட்டும் ஆக்‌ஷன்... -  த்ரிஷாவின் ‘ராங்கி’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனம் பெற்றுள்ளன.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இசையமைத்துள்ள இப்படம் அண்மையில் அதிகம் பேசப்பட்டது. காரணம் படத்திற்கு தணிக்கை குழுவில் 30 காட்சிகள் நீக்கப்பட்டன. இது குறித்து படத்தின் இயக்குநர் சரவணன் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். சென்சாரில் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். வெளிநாட்டுப் பிரச்சனை வருவதால், 30 இடங்களில் கட் மற்றும் மியூட் செய்யப்பட்டது. இருந்தாலும் அது கதையை எங்கும் பாதிக்கவில்லை” என்றார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - அழுத்தமான வசனத்துடன் அறிமுகமாகும் த்ரிஷா ஆக்‌ஷனிலும் இறங்கியிருக்கிறார். ‘பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது....’ என அவர் பேசும் வசனம் கவனம் ஈர்க்கிறது. வெளிநாட்டில் நடக்கும் இப்படத்தின் கதைக்களம் ஆக்சனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ‘த்ரிஷா குடும்பத்தில் நடக்கும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அது சர்வதேச பிரச்சினைக்கு இழுத்துச் செல்கிறது. அதை எப்படி முறியடிக்கிறார்’ என்பது தான் கதை என ஏற்கெனவே படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார். புது ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள த்ரிஷாவின் இப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்