இந்தாண்டு இறுதியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள்

By செய்திப்பிரிவு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மற்றும் ‘டிரைவர் ஜமுனா’ ஆகிய இரண்டு படங்கள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்று நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்படம் இம்மாதம் 29ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மற்றொரு படமும் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா’. இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படம் கடந்த மாதம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது படம் இந்த மாதம் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்