தங்கர் பச்சான் படத்தில் இணைந்த நடிகை அதிதி பாலன் 

By செய்திப்பிரிவு

நடிகை அதிதி பாலன் தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தங்கர் பச்சான் நீண்ட நாட்களுக்குப்பிறகு இயக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. அவர் எழுதிய சிறுகதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. படத்தில், பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது. தற்பொழுது இப்படத்தின் மைய பெண் பாத்திரத்தில் ‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடிக்கிறார்.

“இக்கதையின் ஆணி வேரான இப்பாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளிலிருந்தும் நடிகையைத் தேர்வு செய்ததில் இறுதியாக அதிதி பாலன் மிகவும் பொருத்தமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவாலான இப்பாத்திரத்தில் தனது மெருகேறிய நடிப்பின் மூலம் படைப்புக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன்” கதையின் வலுவான ஆழமான பாத்திரத்தில் அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் இவ்வாறு கூறினார். பாரதிராஜா உடல் நிலை சரியாகி இப்பொழுது சென்னையில் படபிடிப்பு நடை பெற்றுவருகிறது. 20ம் தேதி முதல் இராமேஸ்வரத்தில் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்