மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து, இயக்கியுள்ள படம், ‘உயிர் தமிழுக்கு’. கதையின் நாயகனாக அமீர், நாயகியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளனர். ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா உட்பட பலர் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ள இதை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
படம்பற்றி அமீர் பேசும்போது கூறியதாவது: சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல இந்தப் படத்தில் எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இக்கூட்டணி தொடரும். இந்தப் படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மட்டும் பாருங்கள்.
படம் மொழி பற்றி பேசுமே தவிர, மொழிப் பிரச்சனையை அல்ல. நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமா, இயக்குநரின் மீடியம். நாயகர்களால் தான் சினிமா என்கிற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன். அதே நேரம் ரசிகனாக நடிகர்களைக் கொண்டாடுவோம்.
விரைவில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன். ஏற்கனவே ‘இறைவன் மிகப் பெரியவன்’ மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு அந்த படத்தை இயக்குவேன். இவ்வாறு அமீர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago