நகைச்சுவை கலந்த திகில் படமாக வெளிவரவுள்ள ‘மோ’ இந்த ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவரும் எட்டாவது படம். ‘‘ஒரே ஆண்டில் இத்தனை படங்களா?’ என்றால் சிரிக்கிறார். ”நான் எதையுமே திட்டமிட்டு செய்றதில்லை. சின்ன கேரக்டரா இருந்தாலும் என்னோட கதாபாத்திரம் நல்லா இருக்கான்னு மட்டும்தான் பார்க்கிறேன். அதுதான் எனக்கு முக்கியம்!’’ என்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
புவன் ஆர்.நல்லான் இயக்கத்தில் டபிள்யூடிஎஃப் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரோஹித் ரமேஷ் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘மோ’ படத்தின் புரொமோஷன், புத்தாண்டு கொண்டாட்டம் என்று பரபரப்பாக இருந்த அவரிடம் ஒரு நேர்காணல்..
‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் பேய் படத்தில் நடித்திருக்கிறீர்களே?
‘குற்றமே தண்டனை’ படத்தில் பணிபுரிந்த ஹரியை சந்திச்சப்போ, ‘ஒரு கதை இருக்கு. நீங்க கேட்கணும்!’னு சொன்னார். அப்படி கேட்ட கதைதான் ‘மோ’. சின்ன பட்ஜெட் படமா இருந்தாலும் நல்ல கதையா மனசுக்கு பட்டுச்சு. படத்துல காமெடி நிறைய இருந்துச்சு. பயமே இல்லை. ‘அடடே… பிடிச்சிருக்கே!’ன்னு நடிக்க சம்மதிச்சேன். சின்னச் சின்ன கதாபாத்திரங்களா இருந்தாலும் இந்த வருஷம் முழுக்க வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களா நடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
விஜய் சேதுபதி மாதிரியான ஹீரோக்களோடு நடித்து வரும் சூழலில் திடீரென புதுமுக நாயகனோடு இணைந்து நடிக் கிறீர்களே?
கதைதான் அதுக்கு காரணம். எப்பவுமே தப்பான கதைகளை தேர்வு செய்துடக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன். பெரிய ஹீரோவா? சின்ன ஹீரோ வா?ன்னு பார்க் கிறதில்லை.
‘காக்காமுட்டை’ மாதிரியான படங்கள் தொடர்ந்து அமைய வில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?
இந்த வருஷத்துல ‘இறைவி’, ‘உறியடி’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஜோக்கர்’ மாதிரியான கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வந்திருக்கு. அதே போல கமர்ஷியல், பேண்டஸி, கிளாமர் படங்களும் வந்திருக்கு. ஆனா, இப்படி வந்த படங்கள்ல பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்திருந்தா அழகா இருந் திருக்கும்னு தோணுது. இந்தியில எல்லாம் பெண்களை மையமாக வைத்தே பல படங்கள் உருவாகிட்டிருக்கே. அதே மாதிரி இங்கேயும் பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கியத் துவம் வேண்டும்.
2016-ல் உங்களுக்கு பிடித்த நாயகி யார்?
ராதிகா ஆப்தே. இந்தியில தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருக்காங்க. இங்கே நடிச்ச ‘கபாலி’யில சில இடங்கள்ல அசத்தி யிருந்தாங்க. அதேமாதிரி, தமன்னா. 11 வருஷமா சினிமாவுல தொடர்ந்து டிராவல் பண்ணிக்கிட்டிருக்காங்க. ‘தர்மதுரை’ படத்துல சில நாட்கள் அவங்களோட பழகுற வாய்ப்பு அமைஞ்சது. உயரத்துக்கு போகப்போக இந்த எளிமை எல்லாருக்கும் வருமான்னு தெரியலை. ஆனா, அவங்கக்கிட்ட பார்த் தேன். ரொம்ப எதார்த்தமா பழகினாங்க.
ஆடை குறித்து இயக்குநர் சுராஜ் சொன்ன கருத்துக்கு தமன்னா, நயன்தாரா இருவரும் கோபத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்களே?
ஒரு விஷயத்தை பேசும் போது அதை சொல்லும் விதம்னு ஒன்று இருக்கே. அது இந்த விஷயத்தில் அடிபட்டிருக்கு. இப்போது இருக்கும் கிளாமரை விட அதிக அளவு கிளாமர் இருந்த காலகட்டமெல்லாம் இருந்திருக்கு. அதெல்லாம் இப்போது இல்லை. காரணம், இன்றைக்கு ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எந்த கதைக்கு, எந்தப் படத்துக்கு அது தேவை என்பதை அவர்களே புரிந்துகொண்டு விமர்சிக்கிறார்கள். சினிமா என்று பார்க்காமல் நம்மை சுற்றியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். நயன்தாரா, தமன்னா இந்த விஷயம் குறித்து உடனடியாக எதிர் வினையை தெரிவித்தது மகிழ்ச்சி. இனி யாரும் இந்த மாதிரியான வார்த்தை களை வெளிப்படுத்த வேண் டாமே.
2017-ம் ஆண்டும் உங்களுக்கு பிரகாசமாக இருப்பது போல் தெரிகிறதே?
ஆமாம். தமிழ் படங்களோடு நிவின் பாலியோட சேர்ந்து ‘சகாவு’, துல்கரோட சேர்ந்து ‘ஜோமோண்ட சுவி சேஷங்கள்’னு ரெண்டு மலை யாளப் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இந்தியில நடித்த ‘டாடி’ படமும் விரைவில் ரிலீஸ் ஆகப் போகுது. என்னோட தாய் மொழி தெலுங்கு. அங்கேயும் ஒரு நல்லப் படத்துல அறிமுக மாகணும்னு இருக்கேன். சீக்கிரமே அதுவும் நடக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago