கோவை: நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள லத்தி திரைப்படத்தின் டிரைலர் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாயிகள் பற்றி சரியான படத்தை யாரும் எடுத்ததில்லை. பிரச்சினையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அவர் அமைச்சரானதில் மகிழ்ச்சி.
அரசியலில்தான் அனைவரும் உள்ளோம். ஓ.டி.டி-யில் சின்ன படங்களைத்தான் வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன் ஏற்கெனவே தெரிவித்து விட்டார். சிறிய முதலீடை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
ஓ.டி.டி.யால் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது. சினிமாத்துறைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம். அதை குறைத்தால் நன்றாக இருக்கும்”என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago