சென்னை: எதிர்வரும் பிப்ரவரி 2023-ல் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.
பன்முகத் திறன் கொண்டவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. பண்பலையில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர், தமிழ் திரைத் துறையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற தலைப்பில் கடந்த மாதம் இவர் நடிக்கும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் ‘ரன் பேபி ரன்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா முதலானோர் நடிக்கின்றனர். த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இந்த படத்தை இயக்குகிறார். வரும் பிப்ரவரி 2023 வாக்கில் இந்தப் படம் வெளியாகிறது.
» கால்பந்தாட்ட மாயமானின் கடைசி பாய்ச்சல்: ஓய்வை அறிவித்த மெஸ்ஸி ‘குறிப்பால்’ சொல்வது என்ன?