சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Chilla Chilla’ பாடல் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். தற்போது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Chilla Chilla’ வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை 'காக்கா கதை கேட்டிருக்கேன்' பாடல் புகழ் வைஷாக் எழுதியுள்ளார்.
3.53 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்ட இந்தப் பாடல் மிகவும் எனர்ஜி ரகமாக உள்ளது. இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் கல்யாண் நடனம் அமைத்துள்ளார். அஜித்தின் நடன அசைவுகளும் பாடலின் வீடியோவில் சில இடங்களில் இடம்பிடித்துள்ளன. அதோடு மஞ்சு வாரியர், பாவ்னி, அமீர், சிபி போன்றவர்களுடன் அஜித் ஒரு காட்சியில் உள்ளார்.
பாசிட்டிவான மேற்கோள்கள் அடங்கிய வகையில் இந்த பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளன. அனிருத் வாய்ஸில் வெளிவந்துள்ள மற்றும்மொரு ஹிட் பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
» மாண்டஸ் புயல் | சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு
» நிகழ் பதிவு | மாண்டஸ் புயல் - பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago