டிசம்பர் 11-ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கவிருக்கும் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு தினத்தன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை வரும் டிசம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago