‘மாயா’, ‘கேம் ஓவர்’ படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம், ‘கனெக்ட்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அவர் கணவராக வினய், அப்பாவாக சத்யராஜ், பேய் விரட்டுபவராக இந்தி நடிகர் அனுபம் கெர் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. படம்பற்றி இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறியதாவது:
கரோனா காலகட்டத்தில் நடப்பது போன்றகதை இது. கதைப்படி, நயன்தாரா மகளுக்குப்பேய் பிடித்துவிடுகிறது. அவரும் அவர் கணவரும் வெவ்வேறுஇடங்களில் சிக்கிக் கொள்வார்கள். வீட்டில், மகளைப் பிடித்திருக்கும் பேயை, எப்படி விரட்டுகிறார்கள் என்பதுதான் திரைக்கதை. தரமான படமாக உருவாக்க அதிக சிரத்தை எடுத்துள்ளோம். இதன் கதையை கேட்டதும் நயன்தாரா, நாங்களே தயாரிக்கிறோம் என்று விக்னேஷ் சிவனை சந்திக்கச் சொன்னார். அவரும் கதையை கேட்டதும் தயாரிக்க முன் வந்தார்.
எனது முந்தைய படங்களைப் போலவே இதுவும் பரபரப்பான படமாக இருக்கும். 99 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்துக்கு இடைவேளை கிடையாது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago