கோவில்பட்டி பெண்ணாக நடிக்கிறார் சித்தி இட்னானி

By செய்திப்பிரிவு

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்தவர் சித்தி இட்னானி. இவர் சசி இயக்கும் ‘நூறு கோடி வானவில்’, முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார். முத்தையா இயக்கும் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார் சித்தி இட்னானி.

இதில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் கோவில்பட்டி பெண்ணாக நடிக்கிறேன். கிராமத்துப் பெண்ணாக நடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. பால் கறப்பது, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, மொபட் ஓட்டுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அந்த வட்டாரப் பேச்சுவழக்கில் பேசி நடிப்பது கடினமாக இருக்கிறது.

மும்பை பெண்ணான எனக்கு இது சவாலான விஷயமாக உள்ளது. ஆனால், அதைச் சரியாக செய்திருப்பதாகவே நினைக்கிறேன். முத்தையா இயக்கிய கொம்பன், விருமன் படங்களைப் பார்த்தேன். அவர் இதுபோன்ற கதைகளைச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்