பற்களில் கறை படிவதற்காக வெற்றிலை போட்டு பழகிய சசிகுமார்

By செய்திப்பிரிவு

‘கத்துக்குட்டி', ‘உடன்பிறப்பே’ படங்களை இயக்கிய இரா.சரவணன் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் நடிக்கிறார். சுருதி பெரியசாமி நாயகியாக நடிக்கிறார். சரண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு ‘நந்தன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதல் தோற்றத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

படம்பற்றி இரா.சரவணனிடம் கேட்டபோது, “இது குடி கூலி விவசாயிகளைப் பற்றிய கதை. இவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அவர்களிடம் சேமிப்பு கூட இருக்காது . அவர்களின் வாழ்க்கையை இதில் சொல்லி இருக்கிறேன்.

தமிழ் சினிமாவுக்கு புதிய கதைக்களமாக இது அமையும். பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கேரக்டர், வெற்றிலை கறைபடிந்த பற்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், தினமும் வெற்றிலை போட்டுப் பழகினார் சசிகுமார். அவர்மனைவியாக சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடந்துள்ளது. இப்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்