பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் உருவான கோல்டு படத்தின் முதல் காட்சி திரையிடல் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக இந்தப் படம் இன்று டிசம்பர் 1 ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அல்போன்ஸ் புத்திரனுக்காகவே தமிழகத்தில் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணி காட்சி ரத்தானது. டப்பிங் பணிகள் முடியவில்லை தமிழில் வெளியாவதில் சிக்கல் உள்ளது மலையாளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழ், மலையாளம் என எந்த மொழியிலுமே தமிழகத்தில் முதல் காட்சி வெளியாகவில்லை. லைசன்ஸ் பிரச்சினை காரணம் எனக் கூறுகின்றனர். 10 மணிக் காட்சி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த அல்போன்ஸ் புத்திரன் சுமார் 7 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் 'கோல்டு'. பிருத்விராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
» தன்னே.. தன்னே.. | வெளியானது கோல்டு படத்தின் வீடியோ பாடல்
» ரூ.15 கோடி செலவில் பாடல் காட்சிகள்: ராம்சரண் - ஷங்கர் படத்தின் நியூஸிலாந்து ஷெட்யூல் நிறைவு
இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் பல முக்கிய நடிகர், நடிகைகள் கெஸ்ட் ரோலிலும், முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். பிரேமம் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரனே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago