“மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?” - ‘வாரிசு’ ரிலீஸ் சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘வாரிசு’ பட விவகாரத்தில் அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கில் வெளியாகும் பைலிங்குவல் படமான இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

இப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சார்பில் ஆந்திரா, தெலங்கானாவில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதை நினைவூட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆந்திரா ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், “தொடக்கத்திலிருந்தே ‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என சொல்லிருந்தோம். மே மாதமே நாங்கள் கூறிவிட்டோம். அதன் பிறகுதான் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூன் மாதம் தான் அறிவிக்கப்பட்டது.

அதேபோல பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிட தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் அது சங்கராந்தி ரேஸில் இணைந்தது. பண்டிகை காலங்களில் மூன்று படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் என்னுடன் நல்லுறவில் தான் இருக்கின்றனர். அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தப் புகாரையும் அளிக்காதபோது மற்றவர்கள் ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என புரியவில்லை.

ஹைதராபாத்தில் உள்ள 420 திரைகளில் 37 திரைகளை லீஸுக்கு எடுத்துள்ளேன். ஏசியன் சுனில் 100 திரைகளை வைத்துள்ளார். மற்ற திரைகள் உரிமையாளர்களால் நடத்தப்படுகின்றன. விநியோகஸ்தர் வட்டாரத்தில் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்