மீண்டும் க்ரைம் த்ரில்லர் - உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ முதல் பார்வை 

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அருள் நிதி நடிப்பில் வெளியான படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இந்த படத்தின் இயக்குநர் மு.மாறன் அடுத்ததாக இயக்கும் படம் ‘கண்ணை நம்பாதே’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

அண்மையில் உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ வெளியானது. இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் வகை படமாக வெளியான நிலையில், தற்போது மீண்டும் க்ரைம் படம் ஒன்றில் உதயநிதி நடிக்கிறார். முன்னதாக அவர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. இதில், ‘ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை பூமிகா, நடிகர் சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்