இந்த வாரம் திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பது குறித்து பார்ப்போம். நவம்பர் 25-ம் தேதியான வெள்ளிக்கிழமையன்று மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரவுள்ளன.
ஏஜென்ட் கண்ணாயிரம்: மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ரியா சுமன், ஷ்ருதி ஹரிஹரன், ரெடின் கிங்க்ஸ்லி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘இந்தப் படத்தில் காமெடியை எதிர்பார்க்காதீர்கள்’ என சந்தானம் சொல்லியிருப்பது போல, படம் டிடெக்டிவ் ட்ராமாவாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான ட்ரெய்லர் இதனை உறுதிப்படுத்தியது. படம் வரும் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பட்டத்து அரசன்: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதர்வா நடித்துள்ள படம் ‘பட்டத்து இளவரசன்’. ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஆர்கே சுரேஷ், ராஜ் அய்யப்பா, பால சரவணன், சத்ரு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள படம் கிராமத்துக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் வரும் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
» ‘விசித்திரன்’ படத்துக்கு தமிழ்த் திரைத் துறையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை: ஆர்.கே.சுரேஷ் கவலை
» “மகிழ்ச்சியில் உறைந்திருக்கிறேன்” - ‘கலகத் தலைவன்’ குறித்து ஆரவ் நெகிழ்ச்சி
காரி: பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் ‘காரி’. சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஹேம்நாத் இயக்கியுள்ளார். பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை நவம்பர் 25-ம் தேதி திரையில் காணலாம்.
பவுடர்: விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், சாந்தினி தேவா, விஜய் ஸ்ரீ ஜி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பவுடர்’. நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இபடம் இந்த வாரம் திரையில் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago