மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஷாம், குட்டி ராதிகா, அருண் விஜய் நடிப்பில் ‘இயற்கை’ படம் வெளியாகி 19 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் ’வெண்ணிற இரவுகள்’ படைப்பை மையமாக வைத்து திரைக்கதையாக்கப்பட்ட ‘இயற்கை’ படத்தை பல வருடங்கள் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தக் கொண்டாட்டப் பதிவுகளில் சில...
Visalavathi: எத்தனை காதல் படங்கள் நம் மனதில் மையம் கொண்டிருந்தாலும் "இயற்கை"யான காதலை தோற்கடிக்க இனி இன்னொரு காதல் படம் வரப்போவதில்லை.
புத்தகபுழு: இயற்கை... சிறு வயதில் காதல் என்ற ஒன்று புரியாத வயதில்... காதலை கடத்தி கண்ணீர் விட்ட படம். மிஸ் யூ ஜனநாதன் சார்.
DheeranMSD: இயற்கை... காதல் கொடுத்த கடைசிப் பரிசு தனிமை.
» காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
» டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி - சிறைத்துறை தகவல்
Saloon Kada Shanmugam
குமார் தமிழன்: அருண் விஜய் வராமலே இருந்திருக்கலாம்.
இரவாதன்: காதலுக்கு காரணம் இருக்க முடியாது, காரணம் இருந்தா அது காதலா இருக்காது!
johns paul: அவனைக் கண்டதும் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு அவனை தன்னுடன் அழைத்துச் சென்றாள்... வெண்ணிற இரவுகள்.
75% டீ - டோட்டலர் கீரி
6 படங்கள்லயும் வச்சு இயற்கைதான் best
Miss you comrade #19yearsofiyarkai pic.twitter.com/ahcYPwjsAD— 75% டீ - டோட்டலர் கீரி (@keeriofficial) November 21, 2022
Almighty Push: இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் வெண்ணிற இரவுகள் படிச்சேன். இயற்கை படம் பாத்துட்டு புக் படிச்சா அந்த twist வரும்போது சுவாரசியம் இல்லாம போயுடுமோனு பயந்துட்டே தான் படிச்சேன். முடிவு என்னனு ஏற்கெனவே தெரிஞ்சதுனால நம்ம ஹீரோ உருகி உருகி காதலிக்கிற அப்போ எல்லாம் கஷ்டமாவே இருந்துது. இருண்டு போய் இருக்குற அவன் உலகம் கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சம் பாக்குற அப்போ எல்லாம் மறுபடியும் இருள போகுதேனு பாவமா இருந்தது. ஆனா படிக்க படிக்க, அந்த கடைசி பக்கம் எப்போ வந்துதுனே தெரியல. எப்பவும் மனச பாதிக்கிற climax scene வந்தா, அந்த கோவத்த ஏதோ ஒரு character மேலயாது காட்டி நிம்மதி ஆகிடலாம். ஆனா வெண்ணிற இரவுகள்ல யார் மேலயும் கோபம் கொள்ள முடியாது. எல்லாருமே நல்லவங்க. மூணு பேரோட ஆசையும் நேர்மையா இருக்கு. யாரும் யாரையும் வற்புறுத்தல. நியாயப்படி மூணு பேருக்குமே ஆசை பட்டது கெடச்சு இருக்கணும். ஆனா அப்படி நடக்காது என்பது தான் இயற்கையின் விதி. வெண்ணிற இரவுகள விட பொருத்தமான தலைப்பு இயற்கை தான்.
Sasikumar Sk: நிறைய பண்றத விட எதுவுமே பண்ணாதது தான் மனச ஆழமா பாதிக்குமா? காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணம் இருந்தா, அது காதலா இருக்க முடியாது - ஷேக்ஸ்பியர் #19yearsofiyarkai
Râñjît Mâllîkâ: நமக்குனு நினைச்சிட்டு இருக்கிறப்போ அது நமக்கு கிடைக்காம போறதோட வலி இருக்கே...
Nitharsanan Tharsanan: இந்தப் படம் வந்தப்போ ச்சா #Sham Da Love சேந்திருக்கலாம்னு கவலைபட்டோம்... அப்போ தெரியல நம்ம Love um நமக்கு நாமம் போட்டுத்தான் போகப்போதுன்னு.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago