விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.
இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் 'மட்டி குஸ்தி' என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? வழக்கமான கிராமத்து அடி, தடி, சண்டை, ஹாம்ஸ் தெரியும் படியான சட்டை, முறுக்கு மீசையுடன் இன்ட்ரோ கொடுக்கிறார் விஷ்ணு விஷால். கிராமத்து கதையுடன் கபடியையும் கலந்துகட்டி தன் முந்தைய படத்தின் சாயலை விஷால் நினைவுபடுத்தப்போகிறார் என நினைக்கும்போது ட்ரெய்லர் குஸ்தியை நோக்கி நகர்கிறது.
» சினிமாபுரம் - 4 | கிராமத்து அத்தியாயம் - ‘பேய் பிடித்தல்’ அரசியலும், பெண்ணின் மனப் போராட்டமும்!
» யூகி Review: திகட்டும் திருப்பங்களுடன் த்ரில் அனுபவம் தரும் முயற்சி
தன் முந்தையப்படங்களைப்போலவே நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் ஒன்றாக இதிலும் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திர முக்கியத்துவத்தை ட்ரெய்லரில் உணர முடிகிறது. ‘மான் கராத்தே’ ட்ரெய்லரில் வரும் வசனம் போல இதிலும், விஷ்ணு விஷால் குறித்து எதிராளி பேசும் வசனம் அந்தப்படத்தை நினைவூட்டுகிறது. மொத்தத்தில் குஸ்தியை மையமாக கொண்ட இந்தப்படம் எந்த அளவுக்கு அதில் தனித்தன்மையுடன் படமாகியுள்ளது என்பதை டிசம்பர் 2-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago