‘‘இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போவதற்கு ஒரே வழி ஆயிரம் ரூபாய் நோட்டையும், ஐநூறு ரூபாய் நோட்டையும் ஒழிப்பதுதான்..!’’ - ‘பிச்சைக்காரன்’ படத்தின் இடம்பெற்ற இந்த வசனம் கடந்த இரண்டு நாட்களாக முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்களில் பெரிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழித்து ஏழ்மையை நீக்க வழிசொல்லும் வகையில் ‘பிச்சைக்காரன்’ படத்தில் இந்த வசனத்தை எழுதியுள்ள இயக்குநர் சசியை சந்தித்தோம்.
நீங்கள் ’பிச்சைக்காரன்’ படத்தில் காமெடிக் காட்சியில் வைத்த ஒரு வசனம் இன்று உண்மையாக நடந்திருக் கிறதே?
படத்தின் கதாபாத்திரத்துக்காக நிறைய பிச்சைக்காரர்களை பார்க்கும் சூழல் உருவானது. அப்படி பார்த்தவர் களில் பலர் பொது அறிவு குறித்தும் பேசும் பிச்சைக்காரர்களாக இருந்தனர். நிஜத்தில் அப்படி இருக்கும்போது படத்திலும் ஜனநாயகம் குறித்தும், பொருளாதாரம் குறித்தும் பேசும் கதாபாத்திரத்தை வைக்கலாம் என்றே எண்ணத்தில் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை முடக்க வேண்டும் என்பதை மக்களிடம் பெரிய அளவில் சேர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்த வசனத்தை காமெடி கலந்த கதாபாத்திரம் சொல்வதாக வைத் தோம். நாங்கள் அந்தக் காட்சியை வைத்தபோது வேறு எங்கும் இப்படி பயன்படுத்தி இருக்கிறார்களா? என்பது எங்களுக்குத் தெரியாது. ‘சிவாஜி’ படத்திலும் இதேபோல வசனம் வந்திருக் கிறது என்பதே இப்போதுதான் எங்களுக் கும் தெரியும். அதுவும் மகிழ்ச்சி.
அந்த வசனம் எப்படி உருவானது?
கடந்த 2013-ம் ஆண்டில் சந்திர பாபு நாயுடு இதைப் பற்றி அறிவுறுத்தி யிருப்பதாக என் உதவியாளர் என் னிடம் சொன்னார். நல்ல செய்தியாக இருக்கிறதே... இந்த செய்தியை சாதாரணமாக சொல்லிவிடக் கூடாது. இக்காட்சியை திரும்பத் திரும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வைக்கவேண்டும் என்று நினைத்ததால் காமெடி கலந்த காட்சியில் இதைச் சொல் வதில் நான் உறுதியாக இருந்தேன். படத்தின் நீளம் கருதி இந்தக் காட்சியை வெட்டிவிடலாம் என்ற யோசனை படக் குழுவினருக்கு இருந்தது. நான்தான் பிடிவாதமாக இந்தக் காட்சியை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்று அந்தக் காட்சி இந்த அளவுக்கு போய் சேர்ந்ததை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் படைப்பில் வந்த ஒரு வசனம் இன்று நிஜமாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
இதன்மூலம் என்ன பொருளாதார மாற்றம் நிகழும் என்று எனக்குத் தெரியாது. கறுப்பு பணத்தை ஒழிக்க இது ஒரு சிறந்த வழி. இந்த வசனத்தை வைக்கும்போது அப்படி நினைத்துதான் ஆணித்தரமாக வைத்தேன். இப்போது அது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி. அதேபோல, ஒரு படைப்பாளியாக இந்த மாதிரி விஷயங்களை சமூகத்துக்கு கொண்டு செல்லும்போது ஒரு சின்ன பயமும் இருக்கத்தான் செய்தது. இதனால் நிறையப் பேர் பாதிக்கப்படுவார் களோ என்ற பயம்தான் அது.
ஆனால் இன்றைக்கு கிடைத் திருக்கும் வரவேற்பு அளவு கடந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மீம்ஸ் அதிக அளவில் பகிரப்பட்டு தொடர்ந்து பாராட்டு பெறுகிறது. படத்தில் இந்த வசனம் இடம்பெற்றபோது கிடைத்த வரவேற்பை விட இப்போது அதிக அளவில் பாராட்டுகள் குவிகிறது.
சித்தார்த், ஜி.வி.பிரகாஷை வைத்து அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் களம் என்ன?
கடந்த 2008 ல் ‘பூ’ என்ற பெயரில் காதல் பின்னணியில் ஒரு படத்தை எடுத் தேன். பெண்ணின் மன உணர்வை பிரதி பலிக்கும் ஒரு மைல் கல்லாக அந்தப் படம் பார்க்கப்படுகிறது. ’நல்ல விஷ யத்தை செய்தால் போதும். அதுவாக பேசப்படும் என்பது என் நம்பிக்கை.
அடுத்து சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படத்தை இயக்கவுள்ளேன். ஜனவரியில் படப்பி டிப்பு தொடங்குகிறது. மனித உறவு முறைகளை பற்றிய படம் அது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago