டிச.2-ல் ஓடிடியில் வெளியாகிறது எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’ வெப் சீரிஸ்  

By செய்திப்பிரிவு

புஷ்கர் - காய்த்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ இணையத் தொடர் டிசம்பர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அண்மையில் புஷ்கர் - காய்த்ரி இயக்கத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இருவரும் இணைந்து புதிய தொடர் ஒன்றை தயாரிக்கின்றனர். இதற்கு ‘வதந்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்கும் இந்தத் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்குகிறார்.

இவர் இதற்கு முன்பு ‘லீலை’ என்கிற தொடரை இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தத் தொடரை காண முடியும் என தெரிவிக்கப்படுள்ளது. இதில் லைலா, ஸ்மிருதி வெங்கட், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தத் தொடர் வரும் டிசம்பர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்