“நேர்மறை எண்ணங்களை மட்டும் மனதில் கொள்ளுங்கள். பொறாமையோ வெறுப்போ வேண்டாம்” என நடிகர் அஜித் கூறியுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் கூறியதாக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உங்களை எப்போதும் ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவர்களை, உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். எந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் தேவையற்ற விஷயங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள். உங்கள் இலக்கை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே இருங்கள். எப்போதும் உற்சாகத்தோடு இருங்கள்.
இனி நல்லவைக்கான நேரம்! நேர்மறை எண்ணங்கள் மட்டும் மனதில் கொள்ளுங்கள். பொறாமையோ வெறுப்போ வேண்டாம்! உங்களுக்குள்ளிருக்கும் சிறப்பான திறனை வெளிக்காட்டுங்கள். வாழு... வாழவிடு... அளவில்லா அன்புடன் அஜித்” எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago