கார்த்திக் வேணுகோபாலுடன் கைகோக்கும் ஹிப் ஹாப் ஆதி

By செய்திப்பிரிவு

‘பிளாக் ஷீப்’ யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் வேணுகோபாலன். இவர் அடுத்து ஹிப் ஹாப் ஆதியுடன் கைகோக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஐசரி கணேசஷ் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியே இசையமைக்கிறார். மஹேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் பிரசன்னா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்த பட அறிவிப்பு வீடியோவைப் பார்க்கும்போது படம் பள்ளிக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பது தெரிகிறது. மேலும், படத்தில் ஆதி பிடி ஆசிரியராக நடிக்க இருப்பதையும் அந்த வீடியோ உணர்த்துகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்