‘சிங்கப்பூர் சலூன்’ என் மனதுக்கு நெருக்கமான கதை: இயக்குநர் கோகுல் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். சத்யராஜ், லால்,தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

படம்பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்டபோது கூறியதாவது: இதன் கதையை, இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கூறியிருந்தேன். அவர் ஆர்.ஜே.பாலாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் சொன்னார். கதையை கேட்ட பாலாஜி உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

இயக்குநர் கோகுல்

‘கொரோனா குமார்’ படத்தை முடித்துவிட்டு இதை இயக்க நினைத்திருந்தேன். அந்தப்படம் தள்ளிப் போனதால், இதை தொடங்கிவிட்டேன். நான் இயக்கிய படங்களில் இந்தக் கதை, என் மனதுக்கு நெருக்கமானது. ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கைதான் கதை. இதில் காமெடியும் அதைத்தாண்டிய விஷயங்களும் இருக்கும். வழக்கமாக என் படங்களில் ஹீரோவை தாண்டி அதிக நட்சத்திரங்கள் இருக்காது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எல்லோருக்கும் பிடித்தபடமாக இது இருக்கும். இதை முடித்துவிட்டு ‘கொரோனா குமார்’ படத்தைத் தொடங்குவேன். இவ்வாறு கோகுல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்