ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி நடித்துள்ள படம், ‘கலகத் தலைவன்’. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப்படம் வரும் 18 ம் தேதி வெளியாகிறது. இதில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்பட பலர்நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி, பிரியன்பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
உதயநிதி பேசும்போது, “மகிழ் திருமேனி இயக்கிய ‘தடம்’ நான் பண்ண வேண்டியது. முடியாமல் போய்விட்டது. அந்தப் படம் அருண் விஜய் நடித்து ஹிட்டானது. மகிழ் திருமேனி படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். அது இதிலும் இருக்கிறது. ‘நெஞ்சுக்கு நீதி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். தமிழ் சினிமாவை, நான் தாங்கிப் பிடிப்பதை போல, ‘நடிப்பை நிறுத்திடாதீங்க’ என்று இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கலை.” என்றார்.
மகிழ் திருமேனி பேசும்போது, “உதயநிதி எப்போதும் பணிவாக இருப்பவர். அதனால்தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த படம் உங்களை ஏமாற்றாது. சொன்னபடி 70 நாட்களில் படத்தை முடித்திருக்கிறேன். பேசிய பட்ஜெட்டைவிட குறைவாகவே செலவழித்து முடித்துள்ளேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago