சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘ஸ்ரீ ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சந்தானம் நடிக்க மனோஜ் பீதா இயக்கியுள்ளார். ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஜய் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - படத்தின் சந்தானம் டிடெக்டிவ் ஏஜென்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ட்ரெய்லரில் வரும் சந்தானத்தின் கோட் சூட் தோற்றம், முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘குலுகுலு’ படத்தின் வித்தியாசமான தோற்றத்தை நினைவுப்படுத்துகிறது. பொதுவாக சந்தானத்தின் பட ட்ரெய்லர்களில் நகைச்சுவை, ஒன்லைன் காமெடி, பஞ்சு வசனங்கள், கிண்டல்கள் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அம்சம் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த ட்ரெய்லர் அதற்கு நேர்மாறாக கொஞ்சம் சீரியஸ் டோனிலே கடக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளுக்கான முகாந்திரம் இருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் சந்தானத்தின் இந்தப்படம் வரும் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:
» 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் இளையராஜா - ராமராஜன் கூட்டணி
» தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குனர்: ஆகஸ்ட் 2023ல் ரிலீஸ்
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago