நடிகர் ராமராஜன் 'சாமானியன்' படத்தின் மூலம் மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் நிலையில், அப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலக்கட்டத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் தற்போது ‘சாமானியன்’ படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்த நிலையில், ‘சாமானியன்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படங்களின் பாடல்களும் இப்போது வரைக்கும் ரசிகர்களுக்குப் பிடித்தப் பாடல்களாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்திற்காக இளையராஜா- ராமராஜன் கூட்டணி ஒன்றிணைந்து இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குநர் ஆர்.ராகேஷ் இந்தச் சந்திப்பு பற்றி கூறும்போது, “'சாமானியன்' என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன் தான். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார். கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார். தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago