மும்பை: ஆர்.ஜே.பாலாஜியின் புதுப்படம் குறித்த அறிவிப்பு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுடன் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சி நேரலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
பன்முக திறன் கொண்டவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. பண்பலையில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர், தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கதையின் நாயகனாகவும் இப்போது நடித்து வருகிறார். கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை ஐசரி கணேஷ், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் கத்தரி உடன் சலூன் கடையில் பணியாற்றுவது போல போஸ் கொடுத்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. இந்த படம் வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேடிக்கையான படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago