கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சித்தி இதானி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அவருடன் மலையாள நடிகர் சித்திக், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.60 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழு கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் சிம்பு, "இந்த காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே நான் நினைக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகிறது. விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், கன்னட திரைப்படமான காந்தாரா மற்றும் லவ் டுடே வரை படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எல்லா இயக்குநர்களுக்கும் நல்ல மற்றும் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்ற கூடிய நல்ல காலகட்டம் இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது. தமிழ் சினிமா இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் வித விதமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் முன் ஒருவித பயத்தில் இருந்தேன். ஏனென்றால் வழக்கமான ஹீரோ முன்னிறுத்தும் படமாக இல்லாமல் இப்படம் இருந்தது. ஆனால், மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க தொடங்கியிருப்பதால், அந்த ரசனை என் பயத்தை போக்கி படத்தை வெற்றியாக்கியுள்ளது" என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago