தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'டாணா' படத்திற்கு 'காக்கி சட்டை' என தலைப்பு மாற்றியுள்ளனர்.
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்க, 'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் 'டாணா'. தனுஷ் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கியிருக்கிறது.
'டாணா' என்ற தலைப்பு 'காக்கி சட்டை' என மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியானாலும், அதனை படக்குழு யாரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அனிருத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது "உங்களது அடுத்த படங்கள் என்ன?" என்ற கேள்விக்கு "காக்கி சட்டை, கத்தி, ஆக்கோ" என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் 'டாணா' என்ற படத்திற்கு 'காக்கி சட்டை' என தலைப்பு மாற்றியிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago