ஷாருக்கானுடன் நடிக்கிறேன்; எனக்கு கைகொடுத்தது காமெடிதான் - யோகிபாபு 

By செய்திப்பிரிவு

ஷாருக்கானுடன் இணைந்து இரண்டாவது படம் நடிக்கிறேன். இது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இதற்கு இயக்குநர் அட்லிக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, “ஷாருக்கானுடன் இணைந்து இரண்டாவது படம் நடிக்கிறேன். இது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இதற்காக இயக்குநர் அட்லிக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக நான் செய்த சின்னச்சின்ன சம்பவங்களை வைத்து ஒரு படம் நடிக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்குத் தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. ‘லவ் டுடே’, ‘காபி வித் காதல்’ படமும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் சோலோ பர்ஃபாமென்ஸ்தான் ஹிட்டாக அமையும். எப்போதும் ஹீரோவாக நடிக்க முடியாது. அதற்குத் தகுந்த முகபாவனை எனக்கு கிடையாது. மண்டேலா படத்தைப் பெரிய ஹீரோவை வைத்து எடுக்க முடியுமா? முகத்திற்குத் தகுந்த மாதிரி கேரக்டரில்தான் என்னால் நடிக்க முடியும். அந்த மாதிரி கேரக்டர்தான் எனக்கு ஷாருக்கான் படத்திலும் கிடைத்திருக்கிறது. எனக்கு கை கொடுத்தது காமெடிதான். அதைத் தாண்டி என்னால் வெளியே போகமுடியாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்